மகாநதி சீரியலில் இருந்து வந்த படப்பிடிப்பு தள புகைப்படம்... செம வைரல்
மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் இளம் ரசிகர்கள் விரும்பும் வகையில் ஒளிபரப்பாகும் தொடர் தான் மகாநதி சீரியல்.
4 அண்ணன்-தங்கைகளின் பாசக் கதையாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இப்போது விஜய்-காவேரி ஜோடியின் காதல் கதையாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

கதையில் பசுபதியின் மகன் ராகவ் பழிவாங்கும் எண்ணத்தால் விஜய்-காவேரி மோசமாக விபத்தில் சிக்கியுள்ளார்கள். அவர்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கடைசி எபிசோடில் கூற நாளைய எபிசோடில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக காட்டப்படுகிறது.
போட்டோ
விஜய்-காவேரி ஜோடியை ரசிகர்கள் அந்த அளவிற்கு கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு விபத்து ஏற்பட்டது போல் ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள். அவர்களை இப்படி பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது என கமெண்ட் செய்து வந்தனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய்யாக நடிக்கும் சுவாமிநாதன் புகைப்படம் வெளியாகியுள்ளது, அதைப்பார்த்து ரசிகர்கள் மிகவும் சந்தோஷப்பட்டுள்ளார்கள்.