நிவின் மீது கோபத்தில் போலீஸிற்கு போன் செய்து விஜய் இருக்கும் இடத்தை கூறிய யமுனா... மகாநதி சீரியல் பரபரப்பு புரொமோ
மகாநதி சீரியல்
இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் இப்போது பெரிய பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.
அதாவது வெண்ணிலாவை கீழே தள்ளிவிட்ட பசுபதி அவர் தற்கொலை செய்துகொண்டார் என கூறி மருத்துவமனையில் அனுமதித்து விஜய் மீது பழியை போட்டுவிட்டார்.
இதனால் விஜய் குற்றவாளியாக போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
புரொமோ
மகாநதி சீரியலின் ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு மாலை 5 முதல் 6.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான புரொமோ வெளியாகியுள்ளது, அதில் நிவினை சந்தேகப்பட்டு யமுனா சண்டை போடுகிறார்.
அப்போது விஜய்யை பார்க்க தான் அங்கு சென்றேன் காவேரி அங்கு இருப்பாள் என எனக்கு தெரியாது என்கிறார்.
நிவினை நம்பாத யமுனா போலீஸிற்கு போன் செய்து விஜய் இருக்கும் இடத்தை கூறிவிடுகிறார். போலீஸும் விஜய் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்ய செல்கிறார்கள்.
இதோ அந்த பரபரப்பான புரொமோ,