சீனாவில் 5 நாட்களில் மகாராஜா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மகாராஜா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் மகாராஜா.
இப்படத்தை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். வித்தியாசமான திரைக்கதையில் உருவாகி இருந்த இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து, பிக் பாஸ் சாச்சனா, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
மகராஜா சீனா வசூல்
கடந்த ஜூன் மாதம் வெளிவந்த இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் டாப் 10 படங்கள் என்று லிஸ்ட் எடுத்தால், அதில் கண்டிப்பாக மகாராஜா படமும் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
கடந்த வாரம் மகாராஜா படத்தை சீனாவில் ரிலீஸ் செய்திருந்தனர். 40 ஆயிரம் திரையரங்கங்களில் வெளிவந்த இப்படம், 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகாராஜா படம் சீனாவில் பிரிமியர் ஷோவில் இருந்து மட்டுமே 5 நாட்களில் ரூ. 4.15 கோடி வசூல் செய்துள்ளது.

24 மணி நேரத்தில் 10 படுகொலைகள்; கொலைக்களமாக மாறிய தமிழ்நாடு - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu
