சீனாவில் வசூலை வாரிக்குவிக்கும் மகாராஜா.. இதுவரை எவ்வளவு தெரியுமா
மகாராஜா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் 2024ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இப்படம், வித்தியாசமான திரைக்கதை, கிளைமாக்ஸ் ட்விஸ்ட் என அனைவரையும் மிரள வைத்தது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பிக் பாஸ் சாச்சனா, அனுராக் காஷ்யப், சிங்கம் புலி, அபிராமி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
சீனா வசூல் விவரம்
இப்படம் வெளிவந்த நேரத்தில் ரூ. 110 கோடி வரை உலகளவில் வசூல் செய்திருந்த நிலையில், தற்போது சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டு, வசூலை வாரிக்குவித்து வருகிறது. ஆம், மகாராஜா திரைப்படம் தற்போது சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் மகாராஜா திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகாராஜா படம் இதுவரை சீனாவில் மட்டுமே ரூ. 70 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
