சீனாவில் வசூல் வேட்டையாடும் மகாராஜா.. இதுவரை இத்தனை கோடிகளா
மகாராஜா
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. நடிப்பதை தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.
கமல் ஹாசனுக்கு பதிலாக அந்த இடத்தில் நின்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி, நல்ல வரவேற்பையும் மக்கள் மத்தியில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று மகாராஜா. இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பிக் பாஸ் சாச்சனா, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி ஆகியோர் நடித்திருந்தனர்.
வசூல்
உலகளவில் ரூ. 110 கோடி வசூல் செய்து சாதனை படைத்த மகாராஜா. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படம் சீனாவில் வெளிவந்த நிலையில், வசூலில் வேட்டையாடி வருகிறது.
ஆம், இதுவரை சீனாவில் மட்டுமே ரூ. 83 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் மகாராஜா படத்தின் இதுவரையிலான மொத்த வசூல் ரூ. 193 கோடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.