முதல் நாள் மகாராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மகாராஜா
மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவருடைய 50வது திரைப்படம் தான் மகாராஜா. இப்படத்தை பிரபல இயக்குனர் நித்திலன் இயக்கியுள்ளார்.
இவர் இயக்கத்தில் ஏற்கனவே குரங்கு பொம்மை எனும் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று திரையரங்கில் வெளிவந்த மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
முதல் நாள் வசூல்
மேலும் நட்டி நட்ராஜ், மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மக்களிடையே சிறந்த விமர்சன வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மகாராஜா திரைப்படம் முதல் நாளே உலகளவில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் என கூறப்படுகிறது.

எந்த நேரத்திலும் உன்னைக் கொன்றுவிடுவேன்! முன்னாள் மனைவி, அவரது கணவரை சுட்டுக்கொன்ற நபர் News Lankasri
ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri