சீனாவில் ரஜினியின் சாதனையை முறியடிக்கப்போகும் விஜய் சேதுபதியின் மகாராஜா... இதுவரையிலான கலெக்ஷன்
மகாராஜா படம்
குரங்கு பொம்மை புகழ் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மகாராஜா.
விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான இப்படத்தில் அனுராக் கஷ்யப், பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி, சிங்கம் புலி என பலர் நடித்திருந்தனர்.
பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவான இப்படத்தின் திரைக்கதை ரசிகர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
திரையரங்குகளில் மாஸ் காட்டிய இப்படம் ரூ. 150 கோடி வரை வசூலித்திருந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த படம் சீன மொழியில் டப் செய்து சமீபத்தில் சீனாவில் வெளியாகி இருந்தது. அங்கேயும் நல்ல வசூல் வேட்டை செய்யும் மகாராஜா படம் இதுவரை ரூ. 20 கோடி வரை வசூலித்துள்ளது.
ரஜினியின் 2.0 படம் அங்கு ரூ. 33 கோடி வரை வசூலித்திருந்ததாம், மகாராஜா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் கண்டிப்பாக 2.0 பட வசூலை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.