மகாராஜா படம் இதுவரை சீனாவில் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடிகளா
மகாராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில், இந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மகாராஜா.
இப்படத்தை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி இருந்தார். இப்படத்தில் சாச்சனா, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ், சிங்கம்புலி ஆகியோர் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் ரூ. 110 கோடி வசூல் செய்திருந்தது.
சீனாவில் இதுவரை செய்துள்ள வசூல்
இந்த நிலையில், மகாராஜா படத்தை தற்போது சீனாவில் வெளியிட்டுள்ளனர். சீனாவிலும் மகாராஜா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்து ரசிகர்கள் கொடுக்கும் ரியாக்ஷன்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது. இப்படியிருக்க சீனாவில் மகாராஜா திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை சீனாவில் மட்டுமே இப்படம் ரூ. 65 கோடி வசூல் செய்துள்ளது. ஏற்கனவே ரூ. 110 கோடி வசூல் செய்திருந்த நிலையில், தற்போது ரூ. 65 கோடியும் சேர்த்து, இதுவரை இந்த ஆண்டு மகாராஜா படம் ரூ. 175 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.