பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான மகத் ராகவேந்திராவா இது?... ஆளே மாறிட்டாரே...
மகத் ராகவேந்திரா
மகத் ராகவேந்திரா, தமிழ் சினிமாவில் மங்காத்தா, ஜில்லா, சென்னை 28, மாநாடு உள்ளிட்ட படங்களில் மக்களின் கவனத்தை பெற்றவர் மகத் ராகவேந்திரா.
படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார், ஆனால் சில சர்ச்சைகளில் சிக்கியவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
அதன்பின் மகத் படங்கள் பக்கமோ சின்னத்திரை பக்கமோ காணவில்லை. இந்த நிலையில் தன்னைப் பற்றிய புதிய தொடக்கம் குறித்து தகவலை வெளியிட்டுள்ளார்.

போட்டோ
தனது பிசிக்கல் டிரான்ஸ்பர்மேஷனுக்காக தற்போது பாக்ஸிங் கற்றுள்ளார்.

இவர் கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்றார். இந்த வருடம் ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
கடின உழைப்பை போட்டு தன்னை மாற்றியுள்ள மகத் ராகவேந்திரா புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் அட இவரா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர். இதோ அவரது Transformation புகைப்படம்,
