இந்திய சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த மஹா அவதார் நரசிம்மா.. வசூல் விவரம்
மஹா அவதார் நரசிம்மா
விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான நரசிம்மா அவதாரத்தை மையமாக எடுக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் மஹா அவதார் நரசிம்மா. இப்படத்தை Hombale Films தயாரிக்க அஸ்வின் குமார் இயக்கியிருந்தார். சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார்.
கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்த இப்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து. குறிப்பாக இந்தியாவில் இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
வரலாற்று சாதனை
இந்த நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை ரூ. 15 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். ஆனால், தற்போது இப்படம் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்திய சினிமாவிலேயே அனிமேஷனில் வெளிவந்து மாபெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் இதுவே ஆகும். இதன்மூலம் இந்திய சினிமாவின் வரலாற்றில் மஹா அவதார் நரசிம்மா படம் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
