இயக்குனர் ஷங்கர் மகள்களின் கோரிக்கையை மறுத்த மகேஷ் பாபு ! என்ன ஆனது தெரியுமா?

shankar mahesh babu aditi shankar
By Jeeva Feb 08, 2022 09:29 AM GMT
Report

நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டது குறித்து பேசியுள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது "சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நான் எனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு கொண்டு இருந்தேன். என்னுடன் இயக்குனர் மெஹர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரும் இருந்தனர்.

அப்போது இரண்டு அழகான பெண்கள் என்னிடம் ஆட்டோகிராப் கேட்டனர். இது எனது தனிப்பட்ட குடும்ப நேரம் என்பதால் அந்தநேரம் நான் மறுத்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து, இரண்டு பெண்களும் இயக்குனர் ஷங்கரின் மகள்கள் என்று மெஹர் ரமேஷ் என்னிடம் கூறினார்.

ஷாக்கான நான் அடுத்த தளத்தில் இருந்து ஷங்கரை சந்திக்க நடந்து சென்றேன். அவரிடம் உங்கள் மகள்கள் என்னிடம் ஆட்டோகிராப் கேட்டு வந்தபோது அதை மறுத்ததற்காக மன்னித்து கொள்ளுங்கள் என கூறினேன்.

அதை மிகவும் நேர்மறையாக எடுத்துக் கொண்ட ஷங்கர். நட்சத்திரங்கள் தங்களின் சாதாரண வாழ்க்கையை எப்படி வாழ்கின்றனர் என்பதை பார்ப்பதற்காக தனது மகள்கள் வந்ததாக தெரிவித்தார். அவருடைய எளிமை மற்றும் பணிவு கண்டு நான் மிகவும் திகைத்துப் போனேன்" என தெரிவித்துள்ளார்.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US