முதல் விளம்பரத்தில் நடிக்க வாங்கிய ரூ. 1 கோடி சம்பளம்- மகேஷ் பாபு மகள் சித்தாரா செய்த விஷயம்
மகேஷ் பாபு
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் இப்போது கலக்கிக் கொண்டிருப்பது போல தெலுங்கு சினிமாவிலும் கலக்குகிறார்கள்.
சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வருபவர்களை தாண்டி பிரபலங்களின் வாரிசுகள் தான் அதிகம் நடிக்க வருகிறார்கள்.
அப்படி பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மகன் என்ற அடையாளத்தோடு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இப்போது தனக்கென்று பெயர் சம்பாதித்து கலக்கி வருபவர் தான் மகேஷ் பாபு.
கடைசியாக இவரது நடிப்பில் குண்டூர் காரம் என்ற படம் வெளியாகி இருந்தது.

நீதிபதியிடம் குணசேகரன் கொடுமைகளை புட்டுபுட்டு வைக்கும் பெண்கள், கடைசியில் பேரதிர்ச்சி... எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பு புரொமோ
மகளின் செயல்
மகேஷ் பாபு, நர்மதா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகேஷ் பாபுவின் மகள் சித்தாராவிற்கு இப்போது 12 வயது ஆகிறது.
இவர் அண்மையில் ஒரு ஆடை விளம்பரத்தில் முதன்முறையாக நடித்திருந்தார், அதற்காக ரூ. 1 கோடி சம்பளம் அவருக்கு கொடுக்கப்பட்டதாம்.
அந்த பணத்தை சித்தாரா மொத்தமாக தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சிறுவயதிலேயே மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் உள்ளது வாழ்த்துக்கள் என மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
