மகேஷ் பாபு மகளா இவர்? ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு மாறிட்டாரே
நடிகர் மகேஷ் பாபுவின் மகள் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மகேஷ் பாபு
தெலுங்கு சினிமாவில் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு. அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தொடர்ந்து மாஸான படங்களில் நடிக்கும் அவரது ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
மகேஷ் பாபு நடிகை நம்ரதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.
https://www.instagram.com/p/CmdLQiGPkQ5/
Also Read: நடிகை கனகா வீட்டில் திடீர் தீ விபத்து! அலறி ஓடிய நடிகை
மகள் லேட்டஸ்ட் போட்டோ
மகேஷ் பாபு மகள் சித்தாராவுக்கு தற்போது 10 வயது ஆகிறது. தற்போதே அவர் பெரிய சோசியல் மீடியா ஸ்டார் ஆகிவிட்டார். அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகம் ரசிகர்கள் இன்ஸ்டாவில் இருக்கிறார்கள். மேலும் ஒரு போட்டோ போட்டால் லட்சக்கணக்கில் லைக்குகள் குவிகிறது.
தற்போது சித்தாரா செம ட்ரெண்டி லுக்கில் போட்டோக்கள் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
வருங்காலத்தில் சித்தாரா பெரிய ஸ்டார் ஆக வருவார் என ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.

