ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய மகேஷ் பாபு !
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தான் நடிகராகவும் தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகராகவும் திகழ்ந்து வருபவர் மகேஷ் பாபு. இவரின் திரைப்படங்கள் எப்போதும் பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் உருவாகி வரும் Sarkaru Vaari Paata திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அப்படத்தில் இருந்து வெளியான பாடல் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபு நடித்திருந்த குளிர்பானம் விளம்பரம் ஒன்று சமீபத்தில் வெளியாகியிருந்தது. அந்த விளம்பர படமும் பெரியளவில் எடுக்கப்பட்டிருந்தது.
மேலும் தற்போது அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ் பாபு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக ரூ.12 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.