இந்த ஸ்க்ரிப்ட் வேண்டாம்.. ஷங்கர் இயக்கத்தில் நடிக்க மறுத்த மகேஷ் பாபு!!
ஷங்கர்
தென்னிந்தியாவில் பிரமாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். மூன்று மணி நேர படத்தை சுவாரசியமாகக் கொண்டு செல்வதில் வல்லவர்.
இவருடைய படத்தில் பாடல், சண்டை காட்சிகள், சமூக கருத்துக்கள் இது எல்லாமே இருக்கும். ஷங்கர் இயக்கத்தில் நடிக்க கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல முன்னணி ஹீரோக்கள் ரெடியாக உள்ளனர்.
தெலுங்கில் மெகா ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி, ஷங்கர் உடன் நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.
ஸ்க்ரிப்ட் வேண்டாம்
இந்த நிலையில் ஷங்கர், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்து இரண்டு முறை கதை கூறியுள்ளார். ஆனால் ஸ்க்ரிப்ட் பிடிக்காத காரணத்தால் மகேஷ் பாபு ரிஜெக்ட் செய்துள்ளார். ஷங்கர் சொன்ன கதை மகேஷ் பாபுவுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
