ராஜமௌலியின் அடுத்த பட கதை.. மகேஷ் பாபு இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா?
ராஜமௌலி
இயக்குனர் ராஜமௌலியின் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் வென்றபிறகு உலகம் முழுவதும் படம் பாப்புலர் ஆகி இருக்கிறது. மேலும் தற்போது ஜப்பானில் RRR வசூல் சாதனை படைத்து வருகிறது. அங்கு 100 கோடிக்கும் மேல் இந்த படம் வசூலித்து இருக்கிறதாம்.
அடுத்து இயக்குனர் ராஜமௌலி சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு உடன் கூட்டணி சேர இருக்கிறார். மகேஷ் பாபுவின் 29வது படமாக உருவாகும் இதன் கதை பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
இராமாயண கதாபாத்திரம்..
SSMB29 படத்தில் மகேஷ் பாபுவின் ரோல் இராமாயணத்தில் வரும் அனுமன் கதாபாத்திரம் போல இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகம் முழுவதும் ஏதோ ஒரு விஷயத்தை தேடி செல்வது போல தான் கதை இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங்கை ஆப்ரிக்க காடுகளில் ராஜமௌலி எடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.
ஷூட்டிங் 2023 இறுதியில் தான் தொடங்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
படப்பிடிப்பில் திடீரென குண்டுவெடிப்பு- லியோ பட நடிகர் சஞ்சய் தத் படுகாயம்