மகேஷுக்கு தெரியவந்த உண்மை.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்! சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு அன்பு தான் காரணம் என இதுநாள் வரை நினைத்துக்கொண்டிருக்கிறார் மகேஷ். கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணம் என்பது அவருக்கே தெரியாது என்பது தான் கதை.
அதனால் தான் மகேஷ் அன்பு மற்றும் ஆனந்தி திருமணத்தை நடத்தி வைக்கிறார். தற்போது அன்பு, ஆனந்தி, மகேஷ் மற்றும் வில்லிகள் என எல்லோரும் ஏற்காடு ட்ரிப் சென்று இருக்கின்றனர். அங்கு தான் ரகுவும் இருக்கிறார். அவனை பிடித்தால் தான் ஆனந்தி கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது தெரியவரும்.

அடுத்த வார ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோ வீடியோவில், ஆனந்தி கர்ப்பத்திற்கு அன்பு காரணம் அல்ல என்கிற உண்மை மகேஷுக்கு தெரியவந்துவிடுகிறது.
அதை ஆனந்தி தலையில் சத்தியம் செய்து செல்லும்படி மகேஷ் கூறுகிறார். அவரும் செய்ய, மகேஷ் கடும் ஷாக் ஆகி தான் தவறு செய்துவிட்டதாக புலம்புகிறார்.
ரகுவை எப்படியாவது பிடித்து ஆனந்தி பற்றிய உண்மையை கண்டுபிடிக்க போவதாக மகேஷும் கூறுகிறார். ப்ரோமோவை பாருங்க.