நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இறப்பிற்கு வராததற்கு காரணம் இதுதான்- மகேஸ்வரி உருக்கம்
நடிகை மீனா
குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியது முதல் தமிழ் சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்று வருபவர் நடிகை மீனா. ரஜினியுடன் எஜமான் படத்தில் நாயகியாக தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
பல மொழிகளில் நடித்துள்ள மீனா சினிமாவில் நுழைந்து 40 ஆண்டுகள் ஆனதால் ஒரு பெரிய விழா ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ரஜினி மற்றும் நிறைய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
நடிகை மீனாவிற்கு கடந்த 2009ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.
வித்யாசாகரின் இறுதி ஊர்வலத்தில் சினிமா துறையில் உள்ள நடிகைகள் பலரும் கலந்துகொண்டார்கள். ஆனால் மீனாவின் கணவர் இறுதி ஊர்வலத்தில் நடிகையின் 30 ஆண்டுகால தோழி ஒருவர் வரவேயில்லை.
நடிகையின் பேட்டி
அவர் வேறுயாருமில்லை நடிகை மகேஷ்வரி தான். அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, நானும் மீனாவும் 30 ஆண்டுகளாக தோழிகள். வித்யாசாகரை மீனா எப்போது சந்தித்தாரோ அப்போதில் இருந்தே எனக்கும் தெரியும், மிகவும் நல்லவர்.
மீனாவின் கணவர் இறப்பு செய்தி கேட்டதும் எனக்கு அவரை அந்த கோலத்தில் பார்க்க மனதில் தைரியமில்லை. இன்னொரு பக்கம் சாகரை அந்த கோலத்தில் பார்க்க எனக்கு விருப்பமும் இல்லை.
மீனாவையும் கணவர் இல்லாத கோலத்தில் பார்க்கவும் எனக்கு மனமில்லை, அதனால் நான் அவரை அடுத்த நாள் வந்து சந்தித்து ஆறுதல் கூறினேன் என்று பேசியுள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை சரண்யா துராடி- இந்த டிவி சீரியலா?

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
