டாப் ஹீரோ படத்தில் கசப்பான அனுபவத்தை சந்தித்த நடிகை மஹிமா நம்பியார்.. இப்படியா பண்ணுவீங்க
மஹிமா நம்பியார்
சமுத்திரக்கனி நடிப்பில் அன்பழகன் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த சாட்டை படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் மஹிமா நம்பியார்.
இப்படத்தில் நடிக்கும்போது அவர் 12ஆம் வகுப்பு தான் படித்துக்கொண்டு இருந்தாராம். இதன்பின் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட ரத்தம், 800, RDX ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இதுவரை தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடித்து வரும் நடிகை மஹிமா நம்பியாருக்கு முதல் முறையாக தெலுங்கில் டாப் ஹீரோவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கசப்பான அனுபவம்
நான்கு நாட்கள் தொடர்ந்து அப்படத்தில் நடித்து வந்த மஹிமா, அதன்பின் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டாராம். அப்போது மேனேஜர் ஒருவர் மஹிமாவிற்கு போன் கால் செய்து பேசியுள்ளார்.
உங்களை இப்படத்திலிருந்து தூக்கிவிட்டோம், நீங்க நடித்த கதாநாயகி ரோலில் பெரிய ஹீரோயின் ஒருவர் கமிட்டாகிவிட்டார் என கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட கசப்பான அனுபவன்ங்கள் நடிகை மஹிமா நம்பியார் சந்தித்தாராம்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
