மகாமுனி படத்திற்காக மற்றுமொரு சர்வதேச விருதை வாங்கிய நடிகை மகிமா நம்பியார்.. பாராட்டும் ரசிகர்கள்
அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார்.
இப்படத்திற்கு பின் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த ‘மகாமுனி’ படத்தை இயக்கினார்.
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.
சமீபத்தில் ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், மகாமுனி படத்திற்காக நடிகை மகிமா நம்பியாருக்கு, சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு மேலும் ஒரு சர்வதேச விருது கிடைத்துள்ளது. அதன்படி, டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில், நடிகை மகிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது நடிகை மகிமா நம்பியாருக்கு ரசிகர்களிடம் இருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.