சூப்பர் சிங்கர் டைட்டிலை ஜான் ஜெரோம் ஜெயிக்க காரணமே இதுதானா?... வெடித்த சர்ச்சை
சூப்பர் சிங்கர்
விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் படு பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.
தொடர்ந்து பல சீசன்கள் ஒளிபரப்பாகி வர கடைசியாக சூப்பர் சிங்கர் 10 பெரியவர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது.
புத்தம் புதிய பொலிவுடன் தொடர்ந்து நடந்து வந்த 10வது சீசன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த 10வது சீசன் வெற்றியாளராக பாடகர் ஜான் ஜெரோம் முதல் பரிசை வென்று ரூ. 60 லட்சும் வீட்டையும் வென்றுள்ளார்.
காரணம் இதுவா
தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தை குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த ஜாக் ஜெரோம் டைட்டில் வின்னராக மாறிவிட்டாய் என பிரியங்கா தேஷ்பாண்டே அழுத்தி கூறியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் கள்ளக்குறிச்சியை வைத்து தான் சூப்பர் சிங்கர் டைட்டில் அவருக்கு கொடுக்கப்பட்டதா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் சிலரோ ஜான் டைட்டிலை வெல்ல தகுதியானவர் தான் என வாழ்த்தி வருகின்றனர்.

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
