தனது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய மாகாபா ஆனந்த்... ஒன்றுகூடிய சின்னத்திரை, போட்டோ
மாகாபா ஆனந்த்
தமிழ் சின்னத்திரையில் இப்போது ஏகப்பட்ட தொகுப்பாளர்கள் வந்துவிட்டனர். புதிய நபர்கள் என்ட்ரி கொடுத்தாலும் சிலரின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.
அப்படி ஆர்.ஜேவாக இருந்து இப்போது டாப் தொகுப்பாளர்களில் ஒருவராக கலக்கி வருபவர் தான் மாகாபா ஆனந்த். ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இல்லை என்று தான் கூற வேண்டும்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இதுவரை மாகாபா தொகுத்து வழங்கியது இல்லை, இப்போது அந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். குக் வித் கோமாளி செட்டில் தன்னை மாகாபா ஆனந்த், புகழ், வினோத் 3 பேரும் தாக்கியதாக புகார் எல்லாம் அளித்து பரபரப்பை கிளப்பினார் திவாகர்.

கொண்டாட்டம்
தொகுப்பாளர் மாகாபாவிற்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். வேலைக்கு இடையில் எப்போதும் குடும்பத்துடன் நேரம் செலவிடும் வழக்கத்தை வைத்துள்ள மாகாபா ஆனந்த் இப்போது கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளார்.

அதாவது மாகாபா ஆனந்த் மற்றும் சுசானா இருவரும் தங்களது 20வது வருட திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
அவர்களின் திருமண கொண்டாட்டத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை KPY சரத் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri