காருக்கு டீசல் போட சென்ற மாகாபா ஆனந்த்.. நடந்த சம்பவத்தால் பல லட்ச ரூபாய் நஷ்டம்
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் மாகாபா ஆனந்த். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். ஷோவை காமெடியாக அவர் தொகுத்து வழங்குவது சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த ஒன்று.
இந்நிலையில் மாகாபா ஆனந்த் தனது காருக்கு ஒரு பிரபல நிறுவனத்தின் பங்கில் டீசல் போட்டிருக்கிறார். ஆனால் அந்த டீசலில் தண்ணீர் கலந்து இருந்திருக்கிறது. அதனால் அவரது சொகுசு கார் பழுது ஏற்பட்டு இருப்பதாக மாகாபா ஆனந்த் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

பல லட்சம் செலவு
தண்ணீர் கலந்த டீசல் போடப்பட்டதற்கு ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அது பற்றி புகார் அளித்தால் பேரம் பேசுகிறார்கள், நான் என்ன தவறு செய்தேன் என அவர் காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் காரை சரி செய்ய பல லட்சம் செலவு ஆகி இருப்பதற்கான பில் போட்டோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.