தொகுப்பாளர் மாகாபா வா இது?- சின்ன வயதில் என்ன வேடம் போட்டுள்ளார் பாருங்க
தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது.
ஒரு நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வது தொகுப்பாளரின் வேலை. அப்படி தொகுப்பாளர் துறையை பல வருடங்களுக்கு முன் தேர்வு செய்து இப்போது மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க கூடியவர் மாகாபா ஆனந்த்.
இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார் என்றாலே மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சி இருக்கும்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் பிரியங்காவுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. தற்போது மாகாபா ஆனந்தின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.
அவர் குழந்தையாக இருக்கும் போது அவரது பெற்றோர் பெண் வேடம் போட்டு புகைப்படம் எடுத்துள்ளனர். அதைப்பார்த்த ரசிகர்கள் எவ்வளவு கியூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.