தொகுப்பாளினி பிரியங்காவின் திருமணத்தில் கலந்துகொள்ளாத மா கா பா ஆனந்த்.. காரணம் என்ன தெரியுமா
பிரியங்காவின் திருமணம்
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. தனது காதலர் DJ வசி என்பவரை திருமணம் செய்தார். மிகவும் விமர்சையாக இவர்கள் திருமணம் நடந்தது.
விஜய் டிவி பிரபலங்கள் அமீர், பாவ்னி, நிரூப், அசார், மதுமிதா உள்ளிட்டோர் பிரியங்காவின் திருமணத்தில் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலானது.
கலந்துகொள்ளாத மா கா பா ஆனந்த்
இந்த நிலையில், பிரியங்காவின் நெருங்கிய நண்பரும், தொகுப்பாளருமான மா கா பா ஆனந்த் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. திருமணத்தில் இருந்து அவருடைய புகைப்படங்கள் எதுவும் வெளிவராத காரணத்தினால், மா கா பா ஆனந்த் கலந்துகொள்ளவில்லை என்கின்றனர்.
அதற்கு காரணம் அவர் தனது திருமண நாளை கொண்டாட குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சென்று இருக்கிறார். இதனால் தான் மா கா பா ஆனந்தால் பிரியங்காவின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.