ஜனநாயகன் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு.. சம்பவம் லோடிங்!
ஜனநாயகன்
ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறார்கள்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன் ஆகியோர் நடித்து படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அதாவது ஜனவரி 9 - ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
சம்பவம் லோடிங்!
இந்நிலையில், நேற்று இயக்குநர் ஹெச் வினோத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டனர். அந்த வீடியோவில் கண்டெய்னர், செட், காட்டுப்பகுதி என்று எல்லாமே காட்டப்பட்டுள்ளது.
இதைப் பார்க்கும் போது படம் ஆக்ஷன் படமாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும், இந்த வீடியோவில் விஜய், அனிருத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதோ,
Another year, yet Vin-oth-er reason to celebrate him 🤗
— KVN Productions (@KvnProductions) September 5, 2025
Team #JanaNayagan wishes our Director #HVinoth a very Happy Birthday ❤️#HappyBirthdayHVinoth
▶️ https://t.co/boneRRSepC#Thalapathy @actorvijay sir @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj… pic.twitter.com/8WpHPwplNr