மீண்டும் மலையாள படத்தில் நயன்தாரா, யார் ஹீரோ தெரியுமா?
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
மேலும் சமீபத்தில் நயந்தாரா நடிப்பில் OTT தளத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அடுத்ததாக நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானுடன் நடிக்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து மேலும் இரண்டு கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பஹத் பாசில் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் பாட்டு, கொரோனா காரணத்தினால் அப்படம் தள்ளி போனது.
இதனிடையே இப்படத்திற்கு முன் அல்போன்ஸ் புத்திரன் நயன்தாரா மற்றும் ப்ரித்விராஜை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார். Gold என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடகங்களாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
