தன்னைவிட 12 வயது குறைந்த நடிகரை காதலிக்கும் நடிகை மலைக்கா அரோரா.. பதிலடி கொடுத்த நடிகை
மலைக்கா அரோரா
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மலைக்கா அரோரா. இவர் கடந்த 1998ல் அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு இவ்விருவரும் தீடீரென விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.
விவாகரத்துக்கு பின் தற்போது பிரபல நடிகர் அர்ஜுன் கபூரை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார் மலைக்கா அரோரா.
தன்னைவிட 12 வயது குறைந்த ஒருவர் நடிகை மலைக்கா அரோரா காதலித்து வருவது, பலமுறை சர்ச்சைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
பதிலடி கொடுத்த நடிகை
இந்நிலையில், இதுகுறித்து சமீபத்தில் பேசிய மலைக்கா அரோரா " ஒரு பெண் அவரை விட வயது குறைந்த ஆண் ஒருவரை காதலிப்பது பற்றி பேசுவதை இந்த சமூகம் நிறுத்த வேண்டும். ஒரு ஆண், அவனை விட பாதி வயதுடைய பெண்ணை காதலித்தால் எந்த கேள்வியும் சமூகத்தில் எழுவதில்லை. ஆனால், ஒரு பெண் அப்படி செய்தால் அதை குற்றமாக பார்க்கிறார்கள். ஏன் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி " என கூறியுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
