கார் விபத்தில் சிக்கிய போனி கபூர் மகனின் காதலி! மருத்துவமனையில் அனுமதி
தொடர்ச்சியாக அஜித்தை வைத்து தற்போது படங்கள் எடுத்து வருகிறார் போனி கபூர். அவரது மகன் அர்ஜுன் கபூரும் பாலிவுட்டில் பிரபல நடிகர் தான்.
அர்ஜுன் கபூர் காதலி கார் விபத்து
அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது அதிகமான நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார். அவர்கள் ரிலேஷன்ஷிப் பற்றி அவ்வப்போது பல மோசமான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது நேற்று இரவு மலைக்கா அரோரா கார் விபத்தில் சிக்கி இருக்கிறார்.

கண்ணில் காயம்
புனேவில் ஒரு பேஷன் ஷோவில் பங்கேற்றுவிட்டு மலைக்கா அரோரா மும்பை திரும்பிக்கொண்டிருந்த நிலையில் தான் இந்த கார் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அவரது கண்கள் மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்ட நிலையில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்ததில் அவருக்கு எந்த பெரிய பாதிப்பும் இல்லை என தெரியவந்தது. அதன் பின் இன்று காலை அவரை டிஸ்சார்ஜ் செய்து இருக்கின்றனர்.

என்ன நெல்சன் இது.. இந்த காட்சியில் லாஜிக் இருக்கா! பீஸ்ட் ட்ரைலர் மீது வந்த விமர்சனம்