52 வயதில் 50வது பிறந்தநாள் கொண்டாடிய நடிகை.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
ஒரு சில நடிகைகள் தான் வயதை கடந்து பல வருடங்களாக டாப்பில் இருப்பார்கள். அதற்க்கு காரணம் அவர்களது லுக் கொஞ்சமும் மாறாமல் அப்படியே அவர்கள் இருப்பது தான்.
அப்படி ஹிந்தியில் நடிகை மலைக்கா அரோரார 50 வயதை கடந்த பிறகும் இணையத்தில் பிரபலமான ஒருவராகவே இருக்கிறார். அவர் கிளாமராக படங்களில் ஆடும் டான்ஸ் பெரிய அளவில் வைரல் ஆகிறது. அது மட்டுமின்றி அவரது இன்ஸ்டா போட்டோக்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன.
தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் உடன் மலைக்கா அரோரா கடந்த சில வருடங்களாக காதலில் இருந்தார். அவர்களது வயது வித்தியாசம் தான் பேசுபொருளாக இருந்தது. ஆனால் அவர்கள் தற்போது பிரேக்அப் செய்து பிரிந்துவிட்டனர்.

2 வயது குறைந்தது எப்படி?
சமீபத்தில் மலைக்கா தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். நண்பர்கள், அவரது 22 வயது மகன் உட்பட பலரும் அந்த பார்ட்டியில் இருந்தனர்.
கேக் மீது மலைக்காவுக்கு 50 வயது என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் நிஜத்தில் அவருக்கு 52 வயது ஆகிறது. அதை நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.
2019ல் அவர் 46வது பிறந்தநாளை கொண்டாடி இருந்த நிலையில் தற்போது எப்படி 2 வயது குறைந்தது என நெட்டிசன்கள் கேட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
Malaika arora celebrated her 50th birthday at the age of 52. At this rate she will be ready to date Leonardo Di caprio by 2038 pic.twitter.com/3hKPVcy7Nv
— SwatKat💃 (@swatic12) October 24, 2025
Malaika Arora celebrating her 50th birthday at the age of 52. pic.twitter.com/fSQO69RSXv
— Sunil The Cricketer (@1sInto2s) October 23, 2025