90ஸ் ரீ யூனியனின் ஏன் ஜோதிகா கலந்துகொள்ளவில்லை, காரணம் என்ன?... மாளவிகா சொன்ன தகவல்
90ஸ் ரீ யூனியன்
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் ஒரு விஷயத்தை வருடா வருடம் கடைபிடித்து வருகிறார்கள்.
80களில் சினிமாவில் கலக்கிய பிரபலங்கள் வருடத்தில் ஒருநாள் சந்திக்கும் வழக்கத்தை கொண்டுள்ளார்கள். இதில் தமிழ் மட்டுமில்லாது மற்ற மொழி பிரபலங்களும் கலந்துகொள்வார்கள்.
போட்டோஸ், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அந்த நாளை ஒன்றாக பிரபலங்கள் கொண்டாடுவார்கள், அப்படி சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.
ஜோதிகா
சமீபத்தில் 90களில் கலக்கிய பிரபலங்கள் இப்போது ரீ யூனியன் தொடங்கியுள்ளனர். 90களின் ரீ யூனியனில் சிம்ரன், மாளவிகா, சங்கீதா, சங்கவி, மகேஸ்வரி, கே.எஸ்.ரவிக்குமார், மோகன் ராஜா, ஜக்கு பாய், பிரபுதேவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ரீ யூனியனில் ஜோதிகா ஏன் வரவில்லை என்ற கேள்வி அதிகம் எழும்பியது. அதற்கு சமீபத்தில் ஒரு பேட்டியில் பதில் கூறியுள்ளார் மாளவிகா. அதில் அவர், எனது சினிமா நண்பர்கள் அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி.
இந்த ரீ யூனியனை நல்லவேளை நான் மிஸ் செய்யவில்லை. சிரித்து சிரித்து எனக்கு வாய் வலியே ஏற்பட்டுவிட்டது. மகேஷ்வரிதான் முதன் முதலில் Naughty 90 என்ற வாட்ஸ் அப் குழுவை தொடங்கினார்.
ரீ யூனியன் என்றதும் யாரெல்லாம் ஃப்ரீயாக இருந்தார்களோ அவர்கள் எல்லாம் உடனே டிக்கெட் போட்டு கோவாவுக்கு வந்துவிட்டார்கள். மற்றவர்கள் படங்களுக்கு தேதிகளைக் கொடுத்து விட்டதால் வர முடியவில்லை என்று தெரிவித்தார்.

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
