புதுமண தம்பதிகளான நயன் மற்றும் விக்கி-யை சந்தித்த பிரபல பாலிவுட் நடிகை ! லேட்டஸ்ட் புகைப்படம்..

By Jeeva Jul 11, 2022 01:20 PM GMT
Report

நயன் - விக்கியின் லேட்டஸ்ட் போட்டோ

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.

பல வருடமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த ஜுன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள், இவர்களின் திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

இதனிடையே அவர்கள் இருவரும் தற்போது அவரரவர் திரைபடங்களில் பிஸியாகி விட்டனர், அந்த வகையில் சமீபத்தில் தான் நடிகை நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் இணைந்தார்.

இந்நிலையில் சமுக வலைதளத்தில் தொடர்ந்து நயன் - விக்கியின் புகைப்படங்கள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகையான மாளவிகா அரோரா நயன் - விக்கியை சந்தித்துள்ளார்.

மேலும் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு “வாழ்த்துக்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். 

புதுமண தம்பதிகளான நயன் மற்றும் விக்கி-யை சந்தித்த பிரபல பாலிவுட் நடிகை ! லேட்டஸ்ட் புகைப்படம்.. | Malavika Met Nayan And Wiki

விக்ரம் படம் பார்த்து வியந்த கேஜிஎப் இயக்குனர்! சூர்யாவின் ரோலக்ஸ் பற்றி இப்படியா சொன்னார்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US