விஜய் மீண்டும் அந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும்: மாளவிகா மோகனன்
விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். அதற்கு முன்பு அவர் ரஜினியின் பேட்ட படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார். ஆனால் அவரை பெரிய அளவில் கோலிவுட்டில் பாப்புலர் ஆக்கியது மாஸ்டர் படம் தான்.
அதற்கு பிறகு மாளவிகா தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார். அது விரைவில் ஓடிடியில் வெளி வர இருக்கிறது. அது மட்டுமின்றி ஹிந்தியில் ஒரு படம் வைத்து இருக்கிறார் அவர்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் சமீபத்தில் ரசிகர்கள் உடன் ட்விட்டரில் உரையாடினார். அப்போது விஜய் பற்றி சொல்லுங்க என ஒருவர் கேட்க, "இது ரொம்ப சுலபமான கேள்வி.." என சொல்லிவிட்டு "பீஸ்ட்" என விஜய்யை குறிப்பிட்டு இருக்கிறார் அவர்.
மேலும் "விஜய் சமீப காலமாக ரொமான்டிக் படங்களில் நடிப்பதில்லை, அவர் அதுபோல ஒரு படம் நடிக்க வேண்டும், அதில் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்" என மாளவிகா தெரிவித்து இருக்கிறார்.
That’s an easy one- ‘Beast’ ! Hehe ☺️
— malavika mohanan (@MalavikaM_) February 14, 2022
He hasn’t done a love story in such a long time would love to see him in a romantic flick again I would love to act in one with him! ☺️
— malavika mohanan (@MalavikaM_) February 14, 2022