விஜய் இனி காதல் படங்களில் நடிக்க வேண்டும்.. விஜய்யின் கதாநாயகி விருப்பம்
தளபதி விஜய் தற்போது சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பீஸ்ட் படத்திற்கு முன்பு விஜய் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாஸ்டர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.
இவர் தற்போது தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் குறித்து பேசிய மாளவிகா " காதல் கதை உள்ள படங்களில் விஜய் நடித்து பல ஆண்டுகள் ஆகிறது. இனி விஜய் காதல் கதைக்களம் கொண்ட படங்களில் நடிக்கவேண்டும். அந்த படத்தில் அவருடன் இணைந்து நான் நடிக்க வேண்டும். இது தான் என்னுடைய ஆசை " என கூறியுள்ளார்.
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan