நடிகை மாளவிகா மோகனனின் தந்தை யார் தெரியுமா? அவரும் சினிமா பிரபலம் தானா
மாளவிகா மோகனன்
கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் மாளவிகா மோகனன், தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் கதாநாயகியாக இவர் அறிமுகமான படம் என்றால், அது விஜய்யின் மாஸ்டர் படம்தான்.
இப்படத்தை தொடர்ந்து மாறன் படத்தில் தனுஷுடன் நடித்தார். இப்படம் படுதோல்வியை சந்தித்தது. கிளாமர் நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்ட மாளவிகா, தங்கலான் திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி அனைவரையும் அசரவைத்தார்.
அடுத்ததாக இவர் நடிப்பில் ஹிருதயபூர்வம் எனும் படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் மோகன்லால் உடன் இணைந்து மாளவிகா முதல் முறையாக நடித்துள்ளார். மேலும், கார்த்தியுடன் இணைந்து சர்தார் 2 மற்றும் பிரபாஸ் உடன் ராஜா சாப் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாளவிகாவின் தந்தை
நடிகை மாளவிகா மோகனன் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகை என்பதை நாம் அறிவோம். ஆனால், அவருடைய தந்தை யார் என்று உங்களுக்கு தெரியுமா. மாளவிகாவின் தந்தையின் பெயர் கே.யு. மோகனன். இவர் மிகவும் பிரபலமான ஒளிப்பதிவாளர் ஆவார். பாலிவுட்டில் வெளிவந்த மாபெரும் சூப்பர்ஹிட் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனன் தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ பாருங்க..