ஊரே கழுவி ஊத்தும் அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போகும் ரஜினி பட நடிகை.. யார் தெரியுமா
அனிமல்
சமீபத்தில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவந்த திரைப்படம் அனிமல்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த அனிமல் படத்தை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனாலும் கூட திரையுலக நட்சத்திரங்களில் சிலர் இப்படம் நன்றாக இருக்கிறது என கூறுகிறார்கள்.
அனிமல் இரண்டாம் பாகம்
இந்நிலையில், ஊரே கழுவி ஊத்தும் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அனிமல் இரண்டாம் பாகத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்க நடிகை மாளவிகா மோகனன் இடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இவர் இப்படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் என்ட்ரி கொடுத்து, விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu
