30 வயதாகும் நடிகை மாளவிகா மோகனன்.. திருமணம் எப்போ? பதில் இதோ
மாளவிகா மோகனன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதை விட, இவருடைய போட்டோஷூட் தான் ரசிகர்களிடையே மாளவிகாவை கொண்டு சேர்ந்தது என சொல்லவேண்டும். கிளாமர் குயின் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் இவர் அடுத்ததாக தங்கலான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவரவுள்ளது.
அண்மையில் நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வந்தார். படம் குறித்த அப்டேட், தனது வாழ்க்கை பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பியபோதும் பொறுமையாக பதில் கூறினார்.
திருமணம் எப்போ
இதில் ரசிகர் ஒருவர் 'உங்கள் திருமணம் எப்போ' என கேள்வி எழுப்ப, என்னை திருமண கோலத்தில் பார்க்க ஏன் இவ்வளவு அவசரம்' என கூறி பதில் கொடுத்திருந்தார். திருமணம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் கூறிய இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
