மாளவிகா மோகனன் உடன் திருமணம்.. பத்திரிக்கை அடித்து நேரில் கொடுத்த நபர்!
நடிகை மாளவிகா மோகனன் தமிழில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். மாஸ்டர், தங்கலான் போன்ற படங்களில் நடித்து இருக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
மாளவிகா மோகனன் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனன் என்பவரது மகள் தான். மலையாள குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் அவர் வளர்ந்தது, படித்தது எல்லாமே மும்பை தான்.
ரசிகரால் மாளவிகா ஷாக்
சமீபத்தில் மாளவிகா மோகனன் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு வந்த வித்தியாசமான ப்ரோபோசல்கள் பற்றி பேசி இருக்கிறார்.
"மாஸ்டர் பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஷூட்டிங் முடித்து ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தபோது ஒருவர் கார்டை கொடுத்தார். அவர் ஆட்டோகிராப் வாங்க தான் கொடுக்கிறார் என நினைத்தேன்."
"ஆனால் அது என் பெயரை போட்டு அவர் அடித்து இருந்த திருமண பத்திரிக்கை என்பதை பார்த்து அதிர்ச்சி ஆனேன். என்ன சொல்வது என தெரியாமல் நின்று இருந்த என்னை என் டீம் அழைத்து சென்றனர்" என மாளவிகா மோகனன் கூறி இருக்கிறார்.
மாளவிகா மோகனனை இந்த அளவுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ரசிகர் ஷாக் ஆகிவிட்டாராம்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
