கோபத்தில் கொந்தளித்த நடிகை மாளவிகா மோகனன்.. காரணம் இந்த ஒரு புகைப்படம் தான்
பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி, மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.
இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் எடுத்த இவரது புகைப்படத்தை போட்டோ ஷாப் செய்து சிலர் சமூகவலைதளத்தில் உலவ விட்டுள்ளனர்.
இதை கண்டு அதிர்ச்சியான மாளவிகா, தனது வருத்தத்தையும், ஆதங்கத்தையும் பதிவிட்டிருப்பவர், " இது போன்ற போலியை கண்டால் உடனடியாக புகார் தரவும் " என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.
This is a photo of mine from a few months back which somebody has photoshopped and created a fake vulgar one. A lot of people have been circulating that including media houses like @AsianetNewsTM , which is just cheap journalism. If you see the fake one please help & report. pic.twitter.com/y9QXDf5HHf
— malavika mohanan (@MalavikaM_) February 2, 2022