தோல்விக்கு பின் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை மாளவிகா மோகனன்.. வெளிவந்த அறிவிப்பு
மாளவிகா மோகனன்
ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்த மாளவிகா மோகனன், அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து தனுஷுடன் மாறன் படத்தில் இணைந்து நடித்திருந்தார். நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த மாறன் திரைப்படம் மாபெரும் தோல்வியடைந்தது. மேலும், தற்போது யுத்ரா எனும் படத்தில் நடித்து வருகிறார்.
புதிய அவதாரம்

இந்நிலையில், தற்போது நடிகை மாளவிகா மோகனன் மாறன் படத்தின் தோல்விக்கு பின் தற்போது ஆல்பம் பாடலில் நடனமாட முடிவெடுத்துள்ளார். தவுபா எனும் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் பாடலின் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. Badshah மற்றும் பயல் தேவ் இருவரும் இணைந்து இந்த ஆல்பம் பாடலை பாடியுள்ளனர்.
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu