74 வயது நடிகருக்கு மகளாக நடிக்கவிருந்த மாளவிகா மோகனன்.. இப்படியொரு விஷயம் நடந்ததா
மாளவிகா மோகனன்
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த தங்கலான் படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டி பேசினார்கள்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து 2019ல் வெளிவந்த படம் பேட்ட. இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து மாளவிகா மோகனன் நடித்திருப்பார். இதுவே இவருடைய முதல் தமிழ் திரைப்படமாகும். அதன்பின்தான், விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
மிஸ் ஆன ரஜினி படம்
இந்த நிலையில், மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருந்தாராம் மாளவிகா மோகனன். மாஸ்டர் படத்தை முடித்தபின், லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து படம் இயக்குவதாக இருந்தாராம். அப்படத்தில் ரஜினியின் மகளாக மாளவிகா மோகனன் நடிக்கவிருந்தாராம்.
இந்த தகவல் சமீபத்திய பேட்டி ஒன்றில் மாளவிகா மோகனன் வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது "மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா முடிந்தபின் படம் விரைவில் வெளியாகவிருந்தது. அப்போது நான் ஒரு ஹிந்தி படத்தில் கமிட் ஆனேன். மேலும் லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் மகளாக அந்த படத்தில் நடிக்கவிருந்தேன். ஆனால், அப்போது கொரோனா காலகட்டம் துவங்கியது. அப்படம் நடக்கவில்லை" என கூறியுள்ளார்.