மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.. பிரபாஸ் உடன் நடித்தது குறித்து பேசிய மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்
இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் தி ராஜாசாப்.

இப்படத்தில் முதல் முறையாக பிரபாஸ் உடன் இணைந்து மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற ஜனவரி 9ஆம் தேதி பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிப்படை பேச்சு
இந்த நிலையில், தி ராஜாசாப் படத்திற்கு முன்பே பிரபாஸ் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து நடிகை மாளவிகா மோகனன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதில், " தி ராஜாசாப் படத்திற்கு முன்பே பிரபாஸ் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து கொண்டிருந்தபோது, சலார் படத்திற்காக இயக்குநர் பிரஷாந்த் நீல் சார் எனக்கு கால் செய்து பேசினார். ஆனால், சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனது. பின் மீண்டும் பிரபாஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்" என மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.