இனி அந்தமாதிரி படங்களில் நடிக்க மாட்டேன்.. நடிகை மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். அவர் அதன் பிறகு விஜய் உடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். அதில் பெரிய ரோல் இல்லை. அடுத்து அவர் நடித்த மாறன் படமும் அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்தது.
தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் உடன் தங்கலான் படத்தில் அவர் நடித்து இருக்கிறார். அந்த படத்திற்காக சிலம்பம் உள்ளிட்ட கலைகளை அவர் கற்று அதன் பிறகு தான் நடித்து முடித்திருக்கிறார்.

இனி அப்படி நடிக்க மாட்டேன்
இந்நிலையில் மாளவிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் இனிமேல் முக்கியத்துவம் இல்லாத ரோல்களிகள் நடிக்கவே மாட்டேன் என கூறி இருக்கிறார்.
500 கோடி வசூலிக்கும் பெரிய படமாக இருந்தாலும் கூட என் ரோலுக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் என்னை யாரும் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் இனி படங்களை தேர்வு செய்து தான் நடிக்க போகிறேன் என கூறி இருக்கிறார்.

சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri