கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் ரசிகர்களை கவர்ந்த நடிகை மாளவிகா மோகனன்.. புகைப்படத்துடன் இதோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
இதன்பின் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான தளபதி விஜய்யுடன் இணைந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகி நடித்து அசத்தியிருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி போட்டு, கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும், நடிகை மாளவிகா தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வைரலாகும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..