இந்த வயதிலும் நடிகர் மம்முட்டி இளமையாக இருக்க காரணம்- அவரின் பிட்னஸ் சீக்ரெட்
மம்முட்டி
நடிகர் மம்முட்டி மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரு பிரபலம்.
தமிழில் இவர் தளபதி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், வந்தே மாதரம், பேரன்பு என நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், ஆங்கிலம் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
72 வயதாகும் இவர் அவரது மகன் துல்கர் சல்மானுக்கே டப் கொடுக்கும் வகையில் மிகவும் இளமையுடன் தான் தோற்றமளிக்கிறார். இதற்கு அவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளும், உணவு கட்டுப்பாடும் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
பிட்னஸ் சீக்ரெட்
மம்முட்டி வாலிபால் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவராம். இதேபோல் டயட்டும், ஒர்க்அவுட் விஷயத்தில் கண்டிப்பாக இருப்பாராம். மேலும் உணவுகளை குறைவாக தான் சாப்பிடுவாராம்.
தினமும் அரை மணிநேரம் ஒர்க்அவுட் மற்றும் ரன்னிங் பயிற்சி மேற்கொள்வாராம். எதற்கு டென்ஷன் ஆகாமல் அமைதியாக இருக்கவே அவருக்கு பிடிக்குமாம், அதிகமாக இசையை கேட்பாராம்.
முக்கியமாக தன் வயதை பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்வதையே அவர் அதிகம் விரும்புவாராம்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
