நடிகை ஸ்ரீதேவி மகள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?.. நடிகை காட்டம்
பரம் சுந்தரி
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் நடிக்க வெளியாகப்போகும் திரைப்படம் பரம் சுந்தரி.
துஷர் ஜலோதா இயக்கியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகவுள்ளது, படத்தின் புரொமோஷனையும் படக்குழு அமோகமாக செய்து வருகிறார்கள்.
டெல்லி பையனுக்கும், கேரள பெண்ணிற்கும் ஏற்பட்ட காதலை மையப்படுத்திய கதையாக இப்படம் உள்ளது.
நடிகை காட்டம்
இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதில் ஜான்வி கபூர் பேசியுள்ள மலையாளம் குறித்து ஒரு நடிகை காட்டமாக பேசியுள்ளார்.
அதாவது மலையாள சினிமா நடிகை பவித்ரா மேனன் பேசுகையில், பரம் சுந்தரி டிரைலரில் ஜான்வி கபூர் பேசும் மலையாள உச்சரிப்பில் பிழை உள்ளது.
கேரளாவில் எந்தப் பெண்ணும் இப்படி பேச மாட்டார்கள்.
கேரளத்துப் பெண் கதாபாத்திரத்திற்கு மலையாள நடிகைகளை நடிக்க வைப்பதில் என்ன பிரச்சனை? நாங்கள் திறமை குறைந்தவர்களா? ஸ்ரீதேவியின் மகள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என காட்டமாக பேசியுள்ளார்.