மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் பிரபல நடிகை- தானம் செய்ய முன்வந்த ரசிகர்

actress hospitalised lalitha mollywood
By Yathrika Nov 24, 2021 11:05 AM GMT
Report

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான தேவர் மகன் படத்தை இயக்கியவர் பரதன்.

இவரது மனைவி லலிதா தமிழில் அஜித்துடன் கிரீடம், தளபதியின் காதலுக்கு மரியாதை, காற்று வெளியிடை, அலைபாயுதே என நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இவர் கல்லீரல் செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் கூறியதால் அவரது மகள் ஸ்ரீகுட்டி கல்லீரல் தானம் கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட லலிதாவின் ரசிகரும், கேரள நாடகக் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான கலாபவன் சோபி தானம் செய்ய முன்வந்துள்ளார்.

54 வயதான இவர் நடிகைக்காக தானம் செய்ய வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US