எஸ்பிபி முதல் சித் ஸ்ரீராம் வரை.. தமிழ் சினிமாவின் சிறந்த பாடகர்கள்! சிறப்பு பார்வை

Tamil Cinema Kollywood SPB Singers Sid Sriram
By Parthiban.A Mar 26, 2022 02:03 PM GMT
Report

எஸ்பிபி முதல் சித் ஸ்ரீராம் வரை.. தமிழ் சினிமாவின் சிறந்த பாடகர்கள்! சிறப்பு பார்வை

தமிழ் சினிமாவின் பிரபலமான பாடகர்கள் பற்றி ஒரு ஸ்பெஷல் தொகுப்பு

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாக கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியவர் எஸ்பிபி. பாடும் நிலா என அவரை ரசிகர்களா அன்போடு அழைப்பதுண்டு. அவரது தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் உட்பட 15 மொழிகளில் பாடல்கள் பாடி இருக்கிறார். அவர் ஒரே நாளில் 21 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்து இருக்கிறார்.

எம்ஜிஆரின் அடிமைப்பெண் படத்தில் வரும் ஆயிரம் நிலவே வா தான் இவரது முதல் பாடல் ஆகும். அதற்கு பிறகு அவரது கெரியர் உச்சத்தில் தான் இருந்திருக்கிறது.

கொரோனா தொற்றினால் அவர் கடந்த வருடம் மறைந்தார். எஸ்பிபி உடல் சென்னையில் முழு அரசு மரியாதையை உடன் அடக்கம் செய்யப்பட்டது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தில் வரும் அறிமுக பாடல் தான் எஸ்பிபி-யின் கடைசி பாடல் ஆக அமைந்துவிட்டது.

எஸ்பிபி முதல் சித் ஸ்ரீராம் வரை.. தமிழ் சினிமாவின் சிறந்த பாடகர்கள்! சிறப்பு பார்வை | Male Singers In Tamil

கே. ஜே. யேசுதாஸ்

60 ஆண்டு காலமாக சினிமா பாடல்கள், ஆன்மீக பாடல்கள் என பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருக்கிறார் கேஜே யேசுதாஸ். அவர் கிட்டத்தட்ட 80 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கிறார்.

சபரிமலையில் தினமும் ஒலிக்கும் ஹரிவராசனம் பாடலை பாடியது இவர்தான். மேலும் தமிழில் அவர் தற்போதும் ரசிகர்களை மயக்கும் மெலோடி பாடல்கள், சோக பாடல்கள் பலவற்றை பாடி இருக்கிறார். அவரது ஹிட் பாடல்களை பட்டியலிட்டால் லிஸ்ட் மிக நீளமாக வரும்.

எஸ்பிபி முதல் சித் ஸ்ரீராம் வரை.. தமிழ் சினிமாவின் சிறந்த பாடகர்கள்! சிறப்பு பார்வை | Male Singers In Tamil

ஹரிஹரன்

1992ல் மணிரத்னத்தின் ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அறிமுகம் ஆனவர் தான் ஹரிஹரன். இது நடந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி என பல மொழிகளில் அவர் பாடி இருக்கிறார்.

90ஸ் கிட்ஸ் கொண்டாடிய பாடகர்களில்இவரும் ஒருவர். விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் கெரியரில் பல முக்கிய பாடல்க்ளை அவர் பாடி இருக்கிறார். ரஹ்மான், தேவா போன்ற இசையமைப்பாளர்களுடன் கூட்டணி சேர்ந்து பல பாடல்கள் பாடி இருக்கிறார் அவர்.

ஜீன்ஸ் படத்தின் 'அன்பே அன்பே கொள்ளாதே', ரன் படத்தில் வரும் 'பொய் சொல்ல கூடாது காதலி', ஜோடி படத்தில் வரும் ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. என இவரது பல பாடங்கள் தற்போதைய இளம் தலைமுறையினருக்கும் ரசிக்கும் பாடல்கள் தான்.

எஸ்பிபி முதல் சித் ஸ்ரீராம் வரை.. தமிழ் சினிமாவின் சிறந்த பாடகர்கள்! சிறப்பு பார்வை | Male Singers In Tamil

ராஜமௌலிக்கு பட்டம் கொடுத்த ஷங்கர்! RRR பற்றி போட்ட ட்விட் 

ஷங்கர் மஹாதேவன்

இவரும் தமிழ் உட்பட இந்தியாவின் பல மொழிகளில் பாடி இருப்பவர் தான். தாலாட்டும் காற்றே வாவா.., இன்று நேற்று நாளை படத்தில் வரும் 'காதலே காதலே', விஸ்வரூபம் படத்தில் வரும் 'உனை காணாத கண்ணும் கண்ணல்ல', கண்ட நாள் முதல் படத்தில் 'மேற்கே மேற்கே' போன்ற பாடல்கள் ஷங்கர் மஹாதேவன் கேரியரில் தமிழில் குறிப்பிடத்தக்க ஒன்று.

எஸ்பிபி முதல் சித் ஸ்ரீராம் வரை.. தமிழ் சினிமாவின் சிறந்த பாடகர்கள்! சிறப்பு பார்வை | Male Singers In Tamil

ஹரிஷ் ராகவேந்திரா

90ஸ் கிட்ஸை தனது வசீகர குரலால் அதிகம் ஈர்த்தவர் ஹரிஷ் ராகவேந்திரா. ஹரிஷ் ராகவேந்திராவின் அதிகம் ஹிட் ஆன பாடல்கள் பலவற்ரை ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்து இருக்கிறார்.

தாம் தூம் படத்தில் வரும் 'அன்பே என் அன்பே', காதல் கொண்டேன் படத்தில் வரும் 'தேவதையை கண்டேன்', காதலில் விழுந்தேன் படத்தில் வரும் 'தோழியா என் காதலியா' பாடல் என ஹரிஷ் ராகவேந்திராவின் குரல் 90ஸ் கிட்ஸகளுக்கு தற்போதும் அமிர்தம் தான்.

எஸ்பிபி முதல் சித் ஸ்ரீராம் வரை.. தமிழ் சினிமாவின் சிறந்த பாடகர்கள்! சிறப்பு பார்வை | Male Singers In Tamil

கார்த்திக்

வாரணம் ஆயிரம் 'அவ என்ன என்னை தேடி வந்த அஞ்சல', நவரசா தூரிகா, கஜினி 'ஒரு மாலை இளம்வெயில் நேரம்', 7ஜி 'கண் பேசும் வார்த்தைகள்', ராவணன் ' என கார்த்திக் தற்போதைய இளம் தலைமுறையினரை கவர்ந்த பாடகர்களில் ஒருவர்.

எஸ்பிபி முதல் சித் ஸ்ரீராம் வரை.. தமிழ் சினிமாவின் சிறந்த பாடகர்கள்! சிறப்பு பார்வை | Male Singers In Tamil

சித் ஸ்ரீராம்

இதற்கு முன் லிஸ்டில் வந்த பாடகர்கள் 90ஸ் கிட்ஸுக்கு அதிகம் பிடித்தவர்கள் என்றால், தற்போதைய இளம் தலைமுறையினரான 2k கிட்ஸை அதிகம் கவர்ந்தவராக இருந்து வருகிறார் சித் ஸ்ரீராம்.

அவரது மெலோடியான குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் அவருக்கு கிடைத்து இருக்கிறது.

தள்ளிபோகாதே, மறுவார்த்தை பேசாதே, போ உறவே, விஸ்வாசம் 'கண்ணான கண்ணே', NGK 'அன்பே பேரன்பே', நம்ம வீட்டு பிள்ளை 'உன் கூடவே பொறக்கணும்', நானும் ரவுடி தான் 'என்னை மாற்றும் காதலே' என அவரது பாடல்களை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம்.

இந்த பாடகர்களை தவிர தற்போது இசையமைப்பாளராக இருந்துகொண்டே பாடகராவும் கலக்கி வரும் நட்சத்திரங்கள் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.  

எஸ்பிபி முதல் சித் ஸ்ரீராம் வரை.. தமிழ் சினிமாவின் சிறந்த பாடகர்கள்! சிறப்பு பார்வை | Male Singers In Tamil

மாஸ்டர், வலிமை வசூலை ஒரே நாளில் முந்திய ஆர்ஆர்ஆர்! ஒவ்வொரு ஏரியா வசூல் விவரம் இதோ

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US