படம் செம வெற்றி சம்பளத்தை பல கோடி அதிரடியாக ஏற்றினாரா மமிதா பைஜு... அவரே சொன்ன தகவல்
மமிதா பைஜு
தமிழ் சினிமாவில் வெளியாகும் புதிய படங்களில் அதிகம் இளம் நாயகிகள் களமிறங்குகிறார்கள்.
அப்படி சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டியூட் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, இப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டார் மமிதா பைஜு.
அப்படத்தை தொடர்ந்து அவர் விஜய்யுடன் ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து மமிதா பைஜுவிற்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

சம்பளம்
டியூட் செம வெற்றியடையவே மமிதா பைஜு அடுத்தடுத்த படங்களுக்கு ரூ. 15 கோடி சம்பளம் கேட்கிறார் என தகவல்கள் வெளியாகின.
அதாவது இப்போது முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்மிகாவிற்கு இணையாக சம்பளம் கேட்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவின. இதுகுறித்து மமிதா பைஜு, நான் ரூ. 15 கோடி சம்பளம் பெறுவதாக செய்திகள் பரவி வருகின்றன, நான் சமூக ஊடகங்களில் இல்லை.

ஆனால் அந்தச் செய்திகளை பார்த்து உண்மையில் ஆச்சரியமடைந்தேன். ரூ.15 கோடி சம்பளம் பெருமளவுக்கு பெரியவராகிவிட்டாரா என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
சமூக ஊடகங்களில் பார்க்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மையில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri