பாலா சார் அப்படி செய்யல.. அடித்ததாக பரவிய சர்ச்சைக்கு நடிகை மமிதா பைஜூ விளக்கம்
இயக்குனர் பாலா நடிகைகளை அடிப்பதாக இதற்கு முன்பு பல முறை செய்திகள் வந்திருக்கிறது. சமீபத்தில் வணங்கான் படத்தில் நடித்த மமிதா பைஜூ என்பவர் தன்னை பாலா ஷூட்டிங்கில் அடித்தார் என மலையாள மீடியாவுக்கு கொடுத்த பேட்டி வைரல் ஆனது.
இது சர்ச்சை ஆன நிலையில் நெட்டிசன்கள் பாலாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே சூர்யா இந்த படத்தில் இருந்து வெளியேறிய போது, அவரையும் பாலா அடித்ததாக செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
நடிகை விளக்கம்
இந்நிலையில் நடிகை மமிதா பைஜூ சர்ச்சை பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் பாலா உடன் ஒரு வருடமாக பயணித்து இருக்கிறேன், அவரது டீம் நன்றாக தான் பார்த்துக்கொள்வார்கள்.
"நான் பேட்டியில் சொன்ன ஒரு பகுதியை மட்டும் வெட்டி சர்ச்சை ஆக்கி இருக்கிறார்கள். பாலா சார் ஷூட்டிங்கில் ஸ்ட்ரிக்ட் தான், அது அவரது ஒர்கிங் ஸ்டைல்" என கூறி இருக்கிறார்.
பாலா சார் என்னிடம் ரொம்ப கடுமையாக எல்லாம் நடந்துகொள்ளவில்லை எனவும் அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.


ஒரு சார்ஜில் 165 கிமீ தூரம் செல்லும் - Jindal Mobilitric R40 மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் News Lankasri
